சோடாவில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிக அளவில் இருப்பதால் இதை குடிக்கக் கூடாது எனக் கூறுவர். ஆனால், இதனை மிதமாக உட்கொள்வது சில நன்மைகளைத் தருவதாகவும் அமைகிறது
காஃபின் நிறைந்த
சில சோடாக்களில் காஃபின் நிறைந்திருக்கும். இது புதிய ஆற்றல் உணர்வையும், அதிக கவனம் செலுத்துவதையும் வழங்குகிறது. அதே சமயம், அதிகளவு காஃபின்கள் குமட்டல் போன்ற சில இடையூறுகளை ஏற்படுத்தலாம்
ஹைட்ரேட் செய்ய
சோடா உட்கொள்வது உடலை ஹைட்ரேட் செய்கிறது. அதே சமயம், நீரேற்றமாக இருக்க சோடாவை மட்டும் நம்பக் கூடாது. உடல் சோர்வாக இருக்கும் போது, குறிப்பிட்ட அளவு சோடா எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது
குமுட்டலை எளிதாக்க
குமட்டல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை அகற்ற சோடா உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரம் இல்லை. இதில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால் குமட்டல் தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது
செரிமானத்தை எளிதாக்க
சோடா செரிமானத்தை எளிதாக்குவதுடன், வயிற்று வலியைத் தடுக்க உதவுகிறது. வயிற்றில் அமிலம் இல்லாத நிலை, உணவு சரியாக ஜீரணமாக்குவதை கடினமாக்குகிறது. சோடா குடிப்பதன் மூலம் அமிலத்தன்மை சீராக்கப்பட்டு செரிமானத்தை ஊக்குவிக்கிறது
தற்காப்பு நடவடிக்கைகள்
சோடா குடிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும், அதிகமாக குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் இருப்பதால் நீரிழிவு, உடல்பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்