பொசுபொசுனு முடி வளர இந்த விதைகளை யூஸ் பண்ணுங்க.

By Gowthami Subramani
04 Jan 2024, 12:24 IST

முடி வளர்ச்சிக்கும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் சில ஆரோக்கியமான விதைகள் உதவுகின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு அளிக்கப்படுவதுடன், ஆரோக்கியத்தைத் தருகிறது

ஊட்டச்சத்துக்கள்

தலைமுடிக்கு உதவும் இந்த விதைகளில் புரதம், இரும்புச்சத்து, பயோட்டின், வைட்டமின் ஏ, ஈ, ஒலிக் அமிலம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இவை தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது மிகச்சிறந்த நன்மைகளைத் தரும். இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் துத்தநாகம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. மேலும், இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

பூசணி விதைகள்

இதில் துத்தநாகம், தாமிரம், செலினியம், வைட்டமின் ஏ, பி, மற்றும் சி போன்றவை உள்ளது. இவை முடி உதிர்வைக் குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஸ்மூத்திகள், பான்கேக் கலவை, ஓட்ஸ் மற்றும் பூசணி விதை வெண்ணெய் போன்றவற்றில் சேர்க்கலாம்

ஆளி விதைகள்

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க ஆளி விதைகள் உதவுகிறது. இவை இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், மக்னீசியம், கால்சியம், நார்ச்சத்து பாஸ்பரஸ் போன்றவை நல்ல வளமான மூலமாகும். இவை முடியின் மயிர்க்கால்களுக்கு நன்மை பயக்கும்

கலோஞ்சி விதைகள்

கருப்பு சீரகம் எனப்படும் கலோஞ்சி விதைகள் பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இவை முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வைக் குறைக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு போன்ற பல்வேறு பண்புகள் உச்சந்தலையில் தோற்று ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது

எள் விதைகள்

முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதையாக எள் விதை உள்ளது. இவை தலைமுடிக்கு வலிமையையும், பிரகாசத்தையும் தருகின்றன. இந்த விதைகளை சாலடுகள் போன்றவற்றில் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி எள் விதைகள் போதுமானது

வெந்தய விதைகள்

வெந்தய விதைகள் முடி உதிர்வைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது பொடுகு தொல்லையைத் தடுக்க உதவுகிறது. வெந்தயத்தை ஊறவைத்தோ, பச்சையாகவோ, முளைக்க வைத்தோ சாப்பிடலாம்.