முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும். அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, தாம்பத்ய வாழ்க்கைக்கும் பலம் சேர்க்கக்கூடியதாக உள்ளது.
என்ன தான் வீட்டு தோட்டத்திலோ, கொல்லைப்புறத்திலோ முருங்கை மரம் இருந்தாலும் கூட, அதன் பூவை எடுத்து சமைப்பவர்கள் மிக, மிக அரிது. ஆனால் அதிலுள்ள நன்மைகள் குறித்து அறிந்து கொண்டீர்கள் என்றால், இனி முருங்கைப் பூவை சமைத்து, ருசிக்காமல் விடமாட்டீர்கள்.
முருங்கைப் பூவின் நன்மைகள்:
முருங்கை மரங்களில் பூத்துக் குலுங்கும் பூங்காய் பூ பார்க்க அழகாக இருக்கும். உடல் வலிக்கு இது பயனுள்ளதாக இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான தாதுவான வைட்டமின் ஏ உள்ளது.
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலர் அதிக வேலை காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பார்கள், அவர்கள் உணவில் முருங்கைப் பூவை சேர்த்துக்கொண்டால் உடல் சோர்வு மற்றும் மன சோர்வு இரண்டும் காணாமல் போகும்.
முருங்கைப் பூக்களை சுத்தப்படுத்தி, வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். இந்தப் பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்கவிடவும். இதனை நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் தூக்கமின்மை, நரம்பு நோய்கள் நீங்கி உடல் குதூகலமாக இருக்கும்.
முருங்கை மலர் தேநீர்:
முருங்கை பூ தேநீர் ஆரோக்கியத்திற்கும் நல்லது. உடலின் பலவீனமான நிலை காரணமாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி மற்றும் தலைவலி ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முருங்கைப் பூவை கொதிக்க வைத்து தயாரிக்கப்படும், தேநீரை பருகலாம்.
கண் பிரச்சனைகளுக்கு தீர்வு:
இந்த மலர் அனைத்து கண் நோய்களையும் குணப்படுத்துகிறது. நடுத்தர வயதினருக்கு கண் பிரச்சினைகள் உள்ளன. எனவே முருங்கைப் பூவைப் பொடி செய்து தேனுடன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், கண் குறைபாடுகள் குணமாகும்.
கணினி மற்றும் தொலைக்காட்சியின் முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது கண்களுக்கு பெரும் தீங்கிழைக்கிறது. இதில் இருந்து நிவாரணம் பெற, முருங்கைப் பூக்களை பாலில் கலந்து நன்கு காய்ச்சி சாப்பிட்டலாம்.
முருங்கைப் பூவின் பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூக்களை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.
ஆண், பெண்களுக்கு அவசியமானது:
முருங்கைப் பூக்கள் தாய்மார்களின் பால் சுரப்பை மேம்படுத்தவும், ஆண்களுக்கு உயிரணு ஊக்கியாக செயல்படுகிறது.
கடுகு, பூண்டு, வெங்காயம், சிறிது காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் பூக்களுடன் சேர்த்து வறுத்துச் சாப்பிட்டு வர, பெண்களின் உடல் வலுப்பெறுவதோடு, தாய்ப்பால் பெருகும். இதனை ஆண்கள் சாப்பிட்டால், உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, செல் தரத்தை அதிகரிக்கிறது. பொதுவாக இது உயர் இரத்த அழுத்த சிகிச்சைக்கும் சிறந்த மூலிகையாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
முருங்கைப் பூக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் உலர் பொடி மற்றும் பூவை எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த பூ உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
முருங்கைப் பூக்களை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் உடல்நிலையை சரிபார்க்கவும். இதற்கு பெரிதாக பக்கவிளைவுகள் இல்லை என்றாலும், மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்வது நல்லது.
Image Source: Freepik