Weight Loss Fruits: உடல் எடையை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டாலே போதும்!

  • SHARE
  • FOLLOW
Weight Loss Fruits: உடல் எடையை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டாலே போதும்!


உடல் எடையை குறைக்க உதவும் பழங்கங்கள்

சில பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் அதிக எடை பிரச்சனையை குறைக்கலாம். எந்த பழங்கள் உடல் எடையை குறைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம். உடல் எடை அதிகரிப்பதைக் கவனித்த பிறகு, எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று பலருக்குத் தெரியாமல் நிறைய சிரமப்படுகின்றனர். இனி கவலை வேண்டாம், சில பழங்களை தொடர்ச்சியாக சாப்பிட்டால் உங்கள் உடல் எடை காணாமல் போகும்.

உடலில் உள்ள கொழுப்பை கரைத்தாலே உடல் எடை என்பதும் அதுவாக குறைந்துவிடும். உடல் எடையை குறைக்க சாப்பாட்டில் கட்டுப்பாடு என ஒரேடியாக உணவையும் கைவிட்டுவிடக் கூடாது. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உணவும் முக்கியம். உடல் எடையை குறைப்பதில் நல்ல உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க: காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

உடல் எடையை குறைக்க வேண்டுமா?

உடல் எடையை குறைக்க கவனமாக உணவு உட்கொள்ளும் அதேநேரத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உள்ளிட்டவைகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதோடு சேர்த்து உடல் எடையை குறைப்பதே ஆரோக்கியமான விஷயமாகும். அதன்படி உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் சில பழங்களை சாப்பிட்டாலே உடல் எடையும் சேர்ந்தே குறையும்.

கொய்யாப்பழம்

திரும்பும் திசை எல்லாம் எளிதில் கிடைக்கும் கொய்யாப் பழத்தில் செரிமானக் கோளாறுகளை நீக்கும் பன்புகள் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த பழங்களை சாப்பிட்டாலே உடல் எடை என்பதும் தானாக குறையும்.

தர்பூசணி பழம்

நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இதை சாப்பிடும் போது பசி உணர்வு தானாக அடங்கும். அவ்வளவு வேகமாக பசி எடுக்காது. எனவே இதை சாப்பிட்டாலே பசி தானாக குறையும்.

ஆப்பிள்

ஆப்பிள் இதய ஆரோக்கியம் உட்பட பல உடல் பாகங்களுக்கு நன்மை பயக்கிறது. ஆப்பிளை சாப்பிட்டால் உடல் எடையும் தானாக குறையும். ஆப்பிளில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளது. இந்த பழத்தை சாப்பிட்டால் எடை இழப்பும் தானாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ட்ராபெர்ரி

சந்தையில் கிடைக்கும் அரிதான பழமாக ஸ்ட்ராபெர்ரி இருந்தாலும், இது உடல் உள் ஆரோக்கியத்திற்கும் வெளி ஆரோக்கியத்திற்கும் பலனுள்ளதாக இருக்கிறது. ஸ்ட்ராபெர்ரி எடையை குறைக்கவும் பெரிதளவு உதவும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த பழங்கள் கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் பெரிதளவு உதவியாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நிறைவாக இருக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காது. பச்சை வாழைப்பழத்தில் கொழுப்பு எரியும் தன்மை இருக்கிறது. கூடுதலாக ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வாழைப்பழம் சாப்பிட்டு அவ்வப்போது தண்ணீர் குடித்து வந்தால் நாள் முழுவதும் வயிறு நிறைந்திருக்கும். வாழைப்பழத்தில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க இது பெருமளவு உதவும்.

இதையும் படிங்க: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்

திராட்சை

திராட்சையில் நல்ல நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. தோல் பராமரிப்பு உள்ளிட்ட பல நன்மைகளை இந்த பழம் வழங்குகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. சாப்பிட்டப் பின் எலுமிச்சை சாறு குடித்தால் உடல் எடையை தடுக்க முடியும். அதேபோல் தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்தையும் வழங்கும். அதேநேரத்தில் உடல் எடையை குறைக்கவும் உதவும்.

image source: freepik

Read Next

Arrowroot Powder Benefits: ஆரோரூட் மாவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்