$
Healthy Pregnancy: கர்ப்பத்தின் முதல் 3 மாதங்கள் அல்லது முதல் 12 வாரங்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த காலக்கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் உடல், ஹார்மோன் மற்றும் உளவியல் மாற்றங்களைச் சந்திக்கிறார்கள், அது அவர்களுடைய ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கிறது.
முதல் மூன்று மாதங்களில், கர்ப்பிணிப் பெண்கள் தங்களது சாப்பாட்டிலும், செயலிலும் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது அவர்களின் கருவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன?
பொதுவாக கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பெரும்பாலான பெண்களுக்குத் தெரியும் என்றாலும், முதல் மூன்று மாதங்களில் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி அறிவது மிக முக்கியமான ஒன்று.
முதல் மூன்று மாதங்களில் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று தவிர்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சில மருந்துகள்
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் வாடிக்கையாக எடுத்துக் கொள்ளும் மருந்தாக இருந்தாலும் அதை மருத்துவரின் பரிந்துரையை பெற்ற பிறகே எடுக்க வேண்டும். குறிப்பிட்ட மருந்துகள் கர்ப்ப காலத்தில் தீங்கு விளைவிக்கும். எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன் குழந்தை பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
காஃபின்
சில காஃபின் பொதுவாக கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், அதிகப்படியான காஃபின் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் அதிக காஃபின் உட்கொள்வது கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே காஃபின் பயன்பாட்டை குறைப்பது நல்லது.
கனமான எடை உள்ள பொருட்கள்
கர்ப்ப காலத்தில் கனமான எதையும் தூக்கக் கூடாது. முதல் மூன்று மாதங்களில் கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினசரி வேலைகளில் கவனமாக இருக்கவும், கனமான எடை உள்ள எதையும் தூக்கக் கூடாது. நீரேற்றத்திற்கு முன்னுரிமை கொடுங்கள், வழக்கமான ஒய்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

மது
கர்ப்ப காலத்தில், குறிப்பாக குழந்தையின் உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாதங்களில், மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. ஆல்கஹால் கருவின் வளர்ச்சியில் தீங்கு விளைவிக்கும் மற்றும் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்பத்தைப் பற்றி அறிந்தவுடன், மது அருந்தும் பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.
கூடுதலாக, கர்ப்பத்தைத் திட்டமிடும் தம்பதிகள் மதுவைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது.
புகைப்பிடித்தல்
ஆல்கஹால் போலவே, கர்ப்ப காலத்தில் புகைபிடிப்பதும் குறைப்பிரசவம் மற்றும் குறைந்த பிறப்பு எடை போன்ற சிக்கல்களின் அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தீங்கு விளைவிக்கும். நீங்கள் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: Pregnant tips : விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதம் என்பது மிக முக்கியமான காலகட்டம் ஆகும். உங்கள் குழந்தையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்கள் கையில் தான் உள்ளது. கர்ப்ப காலத்திலும் குழந்தைகள் விஷயத்திலும் சமரசம் என்பதே எப்போதும் வேண்டாம், உடனுக்குடன் மருத்துவரை அணுகுவதே நல்ல தீர்வாக இருக்கும்.
Image Source: FreePik