IVF Insurance Coverage India: கருத்தரிப்பு சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்.!

  • SHARE
  • FOLLOW
IVF Insurance Coverage India: கருத்தரிப்பு சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்.!


நடைமுறையில் உள்ள பல்வேறு சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய சிகிச்சை முறைகள் சில தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கின்றன. அந்த வகையிலேயே, பெண்களின் கருவுறாமை பிரச்சனையும் ஒன்று. இது பலரும் சந்திக்கக் கூடிய பிரச்சனையாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பமான செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்.

மருத்துவ ரீதியாக, பலதரப்பட்ட சிகிச்சைகள் அதிக விலையுயர்ந்த செலவுகளைத் தரவல்லதாக அமைகிறது. உடல்நலக் காப்பீடு என்ற திட்டத்தின் மூலம், பெரும்பாலானோர் சிகிச்சைகளுக்கான செலவைக் கட்டுப்படுத்த முடியும். மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் முதல் சிகிச்சை முன் மற்றும் பின் ஏற்படக்கூடிய செலவுகள், ஐசியு கட்டணங்கள், தினப்பராமரிப்பு செலவு போன்ற சிகிச்சையின் பலதரப்பட்ட அம்சங்களுக்குத் தகுந்தவாறு காப்பீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவ காப்பீட்டீன் கீழ் உள்ளதா, இல்லையா என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?

செயற்கை கருத்தரித்தல் காப்பீட்டீன் கீழ் உள்ளதா?

ஐவிஎஃப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை, மருத்துவ ரீதியாக அவசியமான சிகிச்சையாக கருதப்படவில்லை. எனவே, இந்த சிகிச்சைக்கான செலவு சுகாதார காப்பீட்டு பாலிசியின் கீழ் அல்லது மருத்துவ உரிமைகோரலின் கீழ் இருக்காது. எனவே, இந்த சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகள் அல்லது ஐவிஎஃப் சிகிச்சை உட்பட்ட நபர்கள் சிகிச்சைக்கான முழு செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்வதாக உள்ளது. இந்த செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை விலை உயர்ந்த சிகிச்சையாகும். இதனால், சில காப்பீட்டாளர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவிலான கவரேஜ் வழங்குகின்றனர்.

இதில் ஐவிஎஃப் சிகிச்சைக்கான முழு செலவும் அடங்குகிறது. மேலும், IVF சுழற்சி, மருத்துவ பரிசோதனை அல்லது ஹார்மோன் மதிப்பீடுகள் செலவு, ஓடி செலவு போன்றவையும் அடங்குகிறது. காப்பீட்டாளர்களால் வழங்கப்படக்கூடிய கவரேஜ் மாறுபடலாம். இயற்கையாக கருத்தரிக்க முடியாத தம்பதியர்களின் தேவைக்காக, இந்த காப்பீட்டு வழங்கத் தொடங்கப்பட்டது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன?

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை காப்பீட்டு கவரேஜ் வகைகள்

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு, தற்போது பல காப்பீட்டாளர்களால் வழங்கப்படுகிறது. இதில், காப்பீட்டு வழங்குநர்கள் வழங்கக்கூடிய கவரேஜ் வகைகளைக் காணலாம்.

முழு கருவுறாமைக்கான காப்பீடு

இந்த கவரேஜ் ஆனது, முழு சிகிச்சையின் செலவு அல்லது ஐவிஎஃப்-ன் சுழற்சியை உள்ளடக்கியுள்ளது.

கருவுறாமை நோயறிதலுக்கான காப்பீடு

இதில் ஐவிஎஃப் செயல்முறைக்கு முன்னால் கண்டறியும் சோதனைகள் இந்த கவரேஜில் அடங்கும். இதில் ஹார்மோன் சுயவிவரங்களின் சோதனை, விந்துக்களின் பகுப்பாய்வு, இமேஜிங் சோதனைகள், டிஎன்ஏ சோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் அடங்கும்.

நோயறிதல் மற்றும் கருவுறுதல் சிகிச்சைக்கான காப்பீடு

இதில் நோயறிதல் சோதனைகளின் செலவு மற்றும் சிகிச்சைக்கான மொத்த செலவும் இந்த கவரேஜில் அடங்கும்.

செயற்கை கருவுறுதல் மருந்து

நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய செயற்கை கருவுறுதல் மருந்துகளின் விலை இந்த கவரேஜில் அடங்கும்.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளுக்கு இந்த 5 பிரச்சனைகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

இந்தியாவில் ஐவிஎஃப் செலவு

இந்தியாவில் செயற்கை கருத்தரிப்புக்கான செலவு அதாவது ஒரு சுழற்சிக்கான செலவு சராசரியாக ரூ.1,25,000 முதல் ரூ.1,50,000 வரை ஆகும்.

Image Source: Freepik

Read Next

Pregnancy Test Kit: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்