Sat Sep 12, 2026 | 01:50 AM IST

Doctor Verified

புற்றுநோய் மீண்டும் வருவதற்கு என்ன காரணங்கள் தெரியுமா? அதைத் தடுக்க உதவும் குறிப்புகள் இதோ..

இன்று பலரும் மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களின் நிகழ்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன. இதில் புற்றுநோயும் அடங்குகிறது. இதில் புற்றுநோய் குணமடைந்த பிறகும் ஏன் மீண்டும் வருகிறது என்பதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்வது, தாமதமாக விழித்திருப்பது, போதுமான தூக்கம் வராமல் இருப்பது, தொடர்ந்து மன அழுத்தம், பதப்படுத்தப்பட்ட அல்லது குப்பை உணவை சாப்பிடுவது ஆகியவை நம் உடலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாறிவரும் இந்த வாழ்க்கை முறை பல கடுமையான நோய்களின் அபாயத்தை விரைவாக அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, இந்த பிஸியான காலகட்டத்தில் புற்றுநோய் ஒரு பொதுவான மற்றும் நாள்பட்ட நோயாக மாறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பலர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைகிறார்கள். ஆனால் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மனதில் ஒரு முக்கிய கேள்வி அடிக்கடி எழுவது, ஒரு முறை குணமான புற்றுநோய் ஏன் மீண்டும் வருகிறது?

இது குறித்து நொய்டாவின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் இணை ஆலோசகர் டாக்டர் நீது பாண்டே அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 4 தொற்றுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.!  தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்..

புற்றுநோய் ஏன் மீண்டும் வருகிறது?

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் இணை ஆலோசகர் மருத்துவர் நீது பாண்டே அவர்களின் கூற்றுப்படி, “புற்றுநோய் இன்று மிகவும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பல்வேறு உறுப்புகளில் புற்றுநோய் மீண்டும் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. இவை உயிரியல், மரபணு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பானவை" என்று கூறுகிறார்.

நுரையீரல் புற்றுநோய் மீண்டும் வருவது

நுரையீரல் புற்றுநோயை மீண்டும் வருவதற்கான முக்கிய காரணங்களில் புகைபிடித்தல், மாசுபாடு மற்றும் மரபணு முன்கணிப்பு போன்றவை அடங்குகிறது. நோயாளி முன்பு புகைபிடித்திருப்பது அல்லது நீண்ட காலமாக மாசுபட்ட சூழலில் வாழ்ந்திருப்பது, புற்றுநோய் மீண்டும் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. மேலும், புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியத் தவறுவதும் மீண்டும் வருவதற்கு வழிவகுக்கும்

மார்பகப் புற்றுநோய் மீண்டும் வருவது

பெண்களில் மார்பக புற்றுநோய் குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு உள்ள நோயாளிகளுக்கு மீண்டும் வருவதற்கான ஆபத்து அதிகமாக காணப்படுகிறது. ஹார்மோன் மாற்றங்கள், வயது மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகளும் இதில் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, அறுவை சிகிச்சை அல்லது கீமோதெரபிக்குப் பிறகும், சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், புற்றுநோய் மீண்டும் வரக்கூடும்.

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் மீண்டும் மீண்டும் குடல் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணங்கள் குடலில் ஏற்படும் வீக்கம், சமநிலையற்ற உணவு மற்றும் உடல் பருமன் போன்றவை அடங்குகிறது. சிவப்பு இறைச்சி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது, நார்ச்சத்து இல்லாதது போன்றவை குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, நோயாளிக்கு ஏற்கனவே இருக்கும் சில மரபணு குறிப்பான்கள் மீண்டும் வருவதற்கு பங்களிக்கக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: கேன்சர் வரும் அபாயத்தைக் குறைக்க உதவும் சிறந்த 8 பானங்கள்.. நிபுணரின் கருத்து

புரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் மீண்டும் வருவதற்கு முதன்மையாக வயது, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபணு காரணிகளுடன் தொடர்புடையதாகும். புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் மெதுவாக வளரக்கூடியதாகும். மேலும் ஆரம்ப கட்டங்களில் அதைக் கண்டறியத் தவறும் போது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுடன் சேர்ந்து, அந்த புற்றுநோய் மீண்டும் வருவதற்கு வழிவகுக்கும்.

தோல் புற்றுநோய் மீண்டும் ஏற்படுவது

தோல் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களாக சருமத்தில் ஏற்படும் காயம், அதிகப்படியான சூரிய ஒளி, மரபணு முன்கணிப்பு போன்றவை அடங்குகிறது. நோயாளிகள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து தங்களைப் போதுமான அளவு பாதுகாத்துக் கொள்ளாவிட்டால், தோல் புற்றுநோய் மீண்டும் வரக்கூடும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இந்த அபாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தற்காப்பு நடவடிக்கைகள்

எனவே, புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கு, சீரான உணவை உட்கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறுவது அவசியமாகும். கூடுதலாக, வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆரம்ப அறிகுறிகளுக்கு கவனம் செலுத்துவது புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவுகிறது.

முடிவுரை

பல்வேறு உறுப்புகளில் புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதற்கு உயிரியல், மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாகின்றன. ஆரம்பகால கண்டறிதல், பொருத்தமான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது போன்றவை மீண்டும் வருவதற்கான அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. எனவே, நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் விழிப்புடன் இருப்பது, உடனடியாக மருத்துவரை அணுகுவது மற்றும் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: பெருங்குடல் புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் 10 உணவுகள் – குடல் நலனுக்காக டாக்டர் சௌரப் சேதி சொல்லும் முக்கிய ஆலோசனை!

Image Source: Freepik

Read Next

பெருங்குடல் புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் 10 உணவுகள் – குடல் நலனுக்காக டாக்டர் சௌரப் சேதி சொல்லும் முக்கிய ஆலோசனை!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 02, 2025 23:08 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content