பீட்ரூட் சாப்பிடுவது பெண்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் உடலின் பல நோய்களை குணப்படுத்துகிறது.
பீட்ரூட்டில் நிறைந்துள்ள சத்துக்கள்
பீட்ரூட்டில் பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, கே போன்ற சத்துக்கள் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பீட்ரூட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக நல்லது.
வயிறு ஆரோக்கியத்திற்கு நல்லது
பீட்ரூட் சாப்பிடுவது வயிற்றுக்கு நன்மை பயக்கும். இதனால் செரிமான அமைப்பு மேம்படுவதோடு, மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனை நீங்கும்.
இதயத்திற்கு நல்லது
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் இதயத்திற்கு நல்லது. இதை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இது மாரடைப்பு அபாயத்தை குறைக்கும்.
எலும்புகள் மற்றும் கண்கள் ஆரோக்கியம்
எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் இதில் அதிகம் உள்ளது. அதேபோல் கண் ஆரோக்கியத்திற்கும் இது மிக நல்லது.