தூங்கும் போதும் உடல் எடையைக் குறைக்க இந்த பானங்களை குடிங்க.

By Gowthami Subramani
18 Dec 2023, 13:06 IST

உடல் எடை இழப்புக்கு இரவு உணவு முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு தூங்கும் முன் அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் உணவு உண்ட பிறகு சில பானங்களை அருந்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்

பக்கவிளைவுகள்

உடல் பருமன் காரணமாக, இதயநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் கொழுப்பு நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு விளைவுகள் ஏற்படலாம். இது தவிர மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களும் ஏற்படலாம்

கெமோமில் டீ

இவை உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த பானமாகும். இரவு தூங்குவதற்கு முன் இந்த கெமோமில் டீ அருந்துவது, உடலில் உள்ள கெட்ட டாக்சின்களை வெளியேற்றுகிறது

இலவங்கப்பட்டை டீ

இலவங்கப்பட்டையில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்லது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல்லைத் தவிர்க்க உதவுகிறது

மஞ்சள் மிளகு பால்

வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து குடிப்பது சளி, இருமல் போன்றவற்றைக் குணமாக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள இன்ஃபிளமேட்டரி பண்புகள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

திராட்சை ஜூஸ்

இரவு தூங்கும் முன், நாள்தோறும் ஒரு டம்ளர் சர்க்கரை சேர்க்காத திராட்சை ஜூஸ் குடித்து வருவது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைத்து வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கிறது