6-6-6 வாக்கிங் விதி தெரியுமா? இதோ அதன் நன்மைகளும் இங்கே

By Gowthami Subramani
08 Jan 2025, 18:45 IST

6-6-6 நடைபயிற்சி விதி ஒரு எளிய மற்றும் பயனுள்ள விதிமுறையாகும். இந்த நடைபயிற்சி முறைகளைக் கையாள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் 6-6-6 நடைபயிற்சி விதி தரும் நன்மைகளைக் காணலாம்

எளிய நடைபயிற்சி

இது நடைபயிற்சியை சிறிய, நிர்வகிக்கக்கூடிய அமர்வுகளாகப் பிரிக்கிறது. மக்கள் அதிக நேரமாக உணராமல், நடைப்பயிற்சியை எளிதாக்கும் வகையில் இந்த விதி வடிவமைக்கப்பட்டுள்ளது

எடை மேலாண்மைக்கு

6 நிமிட நடைப்பயிற்சி அமர்வுகள் குறுகியதாகத் தோன்றினாலும், இவை வாரத்தில் கணிசமான அளவு உடல் செயல்பாடுகளைச் சேர்க்கிறது. எனவே நடைபயணத்தில் நிலைத்திருப்பது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. சீரான உணவுடன் இதை இணைப்பது ஆரோக்கியமான எடை பராமரிப்பை ஆதரிக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

நடைபயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இந்த 6-6-6 விதியைத் தொடர்ந்து பின்பற்றுவது இதய ஆரோக்கியத்தைக் கணியமாக மேம்படுத்துகிறது. வழக்கமான நடைபயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு

நீரிழிவு நோயை நிர்வகிக்க அல்லது அதைத் தடுக்க விரும்புபவர்கள், 6-6-6 நடைபயிற்சி விதியைக் கையாளலாம். வழக்கமாக தொடர்ந்து நடப்பது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகும்

மூட்டு ஆரோக்கியத்திற்கு

6-6-6 நடைபயிற்சி விதியின் மற்றொரு நன்மையாக மூட்டு நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. இது மூட்டு விறைப்பைக் குறைக்கிறது. மூட்டு தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் நபர்களுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாகும்

மன ஆரோக்கியத்திற்கு

உடல் செயல்பாடு மன ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் நடைபயிற்சி உடலில் இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்தும் எண்டோர்பின்களை வெளியிடுகிறது