எடையை வேகமாகக் குறைக்க ஆம்லாவை இப்படி சேர்த்துக்கோங்க

By Gowthami Subramani
21 Oct 2024, 18:00 IST

இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லாவில் பல்வேறு வகையான வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

உடல் எடை குறைய

ஆம்லாவில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்த மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எடை குறைய ஆம்லாவை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்

ஆம்லா சாறு

தினமும் காலையில் ஆம்லா சாறு அருந்துவது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடை குறைய வழிவகுக்கிறது. இதற்கு 2-3 தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு அல்லது பொடியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். சுவைக்கு தேன், கருமிளகு தூள் அல்லது கருப்பு உப்பு சேர்க்கலாம்

ஆம்லா டீ

உலர்ந்த ஆம்லா துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து சிறிது ஆம்லா டீயை காய்ச்சலாம். இது ஒரு சிறந்த நச்சு நீக்கும் பானமாக அமைவதுடன் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்கிறது

ஆம்லா சட்னி

நெல்லிக்காய், புதினா மற்றும் கொத்தமல்லி கொண்டு தயாரிக்கப்படும் சட்னி ரெசிபியை உருவாக்கலாம். இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடை குறைய உதவுகிறது.

சாலட்களில் சேர்ப்பது

நெல்லிக்காயை பச்சையாக நறுக்கி சாலட்களில் சேர்க்கலாம். இதன் புளிப்பு மற்றும் கசப்பான சுவை இலை கீரைகளுடன் இணைந்து ஒரு மொறுமொறுப்பான அமைப்பு மற்றும் கூடுதல் வைட்டமின் சி-யை வழங்குகிறது

ஆம்லா ஊறுகாய்

அன்றாட உணவில், காரமான சுவைக்கு ஆம்லா கொண்டு தயாரிக்கப்படும் ஆம்லா ஊறுகாயைச் சேர்க்கலாம். இது சுவையான அனுபவத்தை அளிக்கும் அதே சமயம், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கிறது