மாஸ் வேகத்தில் எடையைக் குறைக்க இந்த விதைகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
14 Dec 2024, 14:54 IST

உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடை குறைய சில விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் எடை குறைய சாப்பிட வேண்டிய விதைகளைக் காணலாம்

ஆளி விதைகள்

இந்த விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இவை கூடுதல் கிலோவைக் குறைக்க உதவுகிறது

சியா விதைகள்

சியா விதைகளில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் நார்ச்சத்துக்கள், புரதம், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. மேலும், இதில் உள்ள மக்னீசியம் சத்துக்கள் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. இதில் உள்ள துத்தநாகம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது

எள் விதைகள்

இந்த விதைகள் தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். இது பசியைக் கட்டுப்படுத்தி, திருப்தியாக வைத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வெந்தய விதைகள்

இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், பசியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

சூரியகாந்தி விதைகள்

இது எடையிழப்பை ஆதரிக்க உதவும் சிறந்த சிற்றுண்டியாகும். மேலும், இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது