நாம் இரவு படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் நெய் தடவிக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து இங்கே காண்போம்.
வீக்கம் குணமாகும்
தூங்கும் முன் முகத்தில் நெய் தடவினால், வீக்கம் குறையும். மேலும் இது தோல் அழற்சியை நீக்கும்.
சுருக்கங்கள் குறையும்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை சரி செய்ய, தினமும் இரவில் தூங்கும் முன் சருமத்தில் நெய் தடவவும்.
வறட்சி நீங்கும்
சரும வறட்சியை போக்க தூங்கும் முன் முகத்தில் நெய் தடவவும். இதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.
கறைகளை அகற்றும்
தினமும் இரவில் தூங்கும் முன் நெய்யில் சருமத்தில் தடவி வர, தேங்கியுள்ள அழுக்குகள் வெளியேறும்.
கொலாஜனை அதிகரிக்கும்
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கொலாஜன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தூங்கும் முன் 2 சொட்டு நெய்யை முகத்தில் தடவுவது கொலாஜனை ஊக்குவிக்கிறது.
தோல் மென்மையாகும்
சருமத்தில் நெய்யை தடவினால், சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். இதன் ஈரப்பதமூட்டும் தன்மை முகத்தின் வறட்சியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.