சரும பராமரிப்பில் சணல் விதை எண்ணெய் ஒரு அற்புதமான மூலப்பொருளாகப் பயன்படுகிறது. இது எந்த வகையான சருமத்திற்கும் பல நன்மைகளைத் தரக்கூடியதாகும். இதில் சருமத்திற்கு சணல் விதை எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்
ஈரப்பதமாக்குவதற்கு
சணல் விதை எண்ணெய் வறண்ட சருமத்தை பாதுகாக்கிறது. இது இறுக்கமான அல்லது வறண்ட சருமத்தை புத்துணர்ச்சியூட்டவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது. இது சருமத் தடையை மீட்டெடுப்பதுடன், ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது
தாடி வளர்வதற்கு
சணல் விதை எண்ணெயில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்கள் தாடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு தாடி வளர வேண்டிய இடத்தில் சருமத்தை சுத்தம் செய்து, சில துளிகள் சணல் எண்ணெய் மசாஜ் செய்யலாம்
வீக்கத்தைக் குறைக்க
சணல் விதை எண்ணெயின் முக்கிய நன்மைகளில் ஒன்று சோர்வுற்ற, அழுத்தமான சருமத்தை குணப்படுத்துவதாகும். இது வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது. மேலும் முகப்பரு, தடிப்புத் தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது
ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்க
சணல் விதை எண்ணெய் சருமத் தடைகளைச் சரி செய்து, சூரிய ஒளி, கதிர்வீச்சு, மாசுபாடு போன்ற முன்கூட்டிய வயதை ஏற்படுத்தும் சூழலிலிருந்து பாதுகாக்கிறது
முதுமையைத் தடுப்பதற்கு
சணல் விதை எண்ணெயில் வைட்டமின் A, E, C மற்றும் F மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இவை சருமத்தின் வெளிப்புற அடுக்கை வலுப்படுத்துகிறது. நீரேற்றத்தைத் தந்து சருமத்தை அழகாக, உறுதியாக வைக்கிறது
மன அழுத்தத்தைப் போக்க
சணல் விதை எண்ணெய் கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு இயற்கையான தேர்வாகும். இதன் தனித்துவமான வாசனை உடனடி ஆறுதலைத் தருகிறது