உருளைக்கிழங்கை இப்படி பயன்படுத்தினால் முகம் பளபளக்கும்!

By Devaki Jeganathan
05 Dec 2023, 22:59 IST

.

உருளைக்கிழங்கு சாறு சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதன் சாற்றை தினமும் சருமத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெறும். இதன் நன்மைகள் இங்கே பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

வைட்டமின் பி6, வைட்டமின் சி, நியாசின், வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உருளைக்கிழங்கு சாற்றில் உள்ளன.

சருமத்தை ஈரப்பதமாக்கும்

உருளைக்கிழங்கு சாறு சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சரும வறட்சியையும் குறைக்கிறது.

வறட்சியை நீக்கும்

உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவினால் சரும வறட்சி நீங்கும். மேலும், இதைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் ஈரப்பதம் அப்படியே இருக்கும்.

முகப்பரு நீக்க

உருளைக்கிழங்கு சாற்றை தடவினால் முகப்பரு பிரச்சனை தீரும். மேலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் துளைகளை நிரப்ப உதவுகிறது.

எரிச்சல் நீங்கும்

உங்கள் தோல் மிகவும் எரிச்சலடைந்தால், உருளைக்கிழங்கு சாற்றைப் பயன்படுத்துங்கள். அதன் சாறு சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால், எரியும் உணர்வு இருக்காது.

தோலை இறுக்கும்

உங்கள் தோல் மிகவும் தளர்வாக இருந்தால், உருளைக்கிழங்கு சாற்றை சருமத்தில் தடவவும். சருமத்தின் தளர்ச்சியை நீக்கி இறுக்கமாக்கும். இதற்கு சாறுடன் எலுமிச்சையையும் சேர்க்கலாம்.