உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் பீட்ரூட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இது குறித்து அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
கற்றாழையுடன் பீட்ரூட் ஜூஸை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் கதகதப்பான நீரில் முகத்தை கழுவவும். இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளுக்கும்.
பீட்ரூட்டை உலர்த்தி பொடி செய்துக்கொள்ளவும். அவ்வப்போது இந்த பீட்ரூட் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து ஃபேஸ் போக் செய்து, முகத்தில் தடவி வரவும். இது முகப்பருக்களை குறைக்கும்.
பீட்ரூட் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து ஃபேஸ் போக் செய்து, முகத்தில் தடவி வரவும். இது உங்கள் சருமத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றவும், பாக்டீரியாக்களை அகற்றவும் உதவுகிறது.
பீட்ரூட் பொடியை அரிசி மாவுடன் கலந்து தடவி, 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் கதகதப்பான நீரில் முகத்தை கழுவவும். இது உங்கள் சருமத்தை பொலிவாக்கும்.
பீட்ரூட் துண்டுகளை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து வந்தால், முகம் பளபளப்பாகும். இது உடனடி ஜொலிப்பை ஏற்படுத்தும்.