ரமலான் மாதத்தில் காலையில் இதை சாப்பிட வேண்டாம்!

By Karthick M
16 Mar 2024, 17:48 IST

ரம்ஜான் ஆரோக்கிய உணவுகள்

ரம்ஜான் புனித நாட்களில் நோன்பிருக்கும் போது சில காலை உணவுகளை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நினைவில் வைக்க வேண்டிய விஷயம்

நோன்பிருக்கும் போது வெயிலில் செல்வதை தவிர்க்கவும். இதனால் உடலின் அதிக ஆற்றல் வீணாகிவிடும். உங்களை நீரேற்றமாக வைத்திருக்க திரவ உணவு மற்றும் பழங்களை உட்கொள்ளவும்.

காரமான பொருட்களை தவிர்க்கவும்

நோன்பிருக்கும் போது காலையில் காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது. இது உங்கள் வயிற்றில் எரியும் உணர்வை ஏற்படுத்தும். நாள் முழுவதும் தாகமான உணர்வை உண்டாக்கும்.

காஃபின் பொருட்கள்

காலையில் காஃபின் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் டீ அல்லது காபி குடிக்க வேண்டாம். இது உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி மீண்டும் மீண்டும் தாகத்தை ஏற்படுத்தும்.

சாப்பிடக் கூடாத உணவுகள்

சோடா போன்ற குளிர் பானங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் உள்ளிட்டவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

உடல் ஆரோக்கியத்தை கண்காணித்து நோன்பிருந்து ரமலான் தினங்களை கொண்டாட வாழ்த்துக்கள். உடலில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.