வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இங்கே..

By Ishvarya Gurumurthy G
15 Dec 2023, 13:18 IST

நீங்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? அப்போ வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி போன்ற சிட்ரஸ் பழங்களை உங்கள் வழக்கத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். இது வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக திகழ்கிறது.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் புத்தி கூர்மையாகும்.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் வைட்டமின் சி உள்ளது. இதனை உங்கள் உணவு வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வைட்டமின் சி-ஐ பெற முடியும்.

கொய்யாப்பழம்

இது வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ளது. இது கொழுப்பை குறைக்க உதவும்.

குடைமிளகாய்

மஞ்சள் குடைமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ப்ரோக்கோலி

இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. புற்றுநோயை குணப்படுத்த ப்ரோக்கோலி சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சிறப்பாக செயல்படுகிறது.