இந்த பொருட்களில் டாய்லெட் சீட்டை விட அதிக கிருமிகள் இருக்கு!

By Kanimozhi Pannerselvam
18 Oct 2024, 13:30 IST

கட்டிங் போர்டு

கட்டிங் போர்டு வீட்டில் உள்ள அழுக்குப் பொருட்களில் ஒன்றாகும். இது உணவு மற்றும் தண்ணீருடன் அதிகம் இணைந்திருப்பதால், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகும் அபாயமும் அதிகமாக உள்ளது.

ரிமோட்

ஒவ்வொரு வீட்டிலும் ரிமோட் இருக்கும். யாரேனும் வந்து உபயோகித்துவிட்டு, அதை வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். சாப்பிடும் போது கூட பல நேரங்களில் ரிமோட்டைத் தொடுவார்கள். இதன் விளைவாக பாக்டீரியா எளிதில் பரவுகிறது. எனவே ரிமோட்டை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.

ஸ்மார்ட்போன்

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் அனைவரின் கையிலும் 24 மணி நேரமும் உள்ளது. இரவும் பகலும் உறக்கமும் விழிப்பும் மக்கள் இதில் சிக்கித் தவிக்கின்றனர். கழிவறை இருக்கைகளை விட மொபைல் போன்களில் 10 மடங்கு பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தண்ணீர் பாட்டில்

தண்ணீர் பாட்டில், ஃபேன், லைட், ஸ்விட்ச் கைப்பிடி, படுக்கை அல்லது படுக்கை விரிப்பு. இவற்றை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

மேஜை

தேசிய சுகாதார ஆராய்ச்சி மையத்தின்படி, ஒரு மேசையில் கழிப்பறை இருக்கையை விட 400 மடங்கு அதிகமான கிருமிகள் உள்ளன. இதேபோல், கணினி, விசைப்பலகை மற்றும் மவுஸிலும் அளவற்ற பாக்டீரியாக்கள் உள்ளன.

எச்சரிக்கை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடியவை. அவற்றைத் தொட்ட பிறகு உங்கள் கைகளைக் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் பல்வேறு உடல்நலக்கோளாறுகளைச் சந்திக்க நேரலாம்.