படுக்கையில் அமர்ந்து உணவு
பிஸியான கால அட்டவணை காரணமாக நாம் அனைவரும் சோர்வாக உணருகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல சமயங்களில் சௌகரியம் கருதி படுக்கையில் அமர்ந்து உணவு உண்கிறோம். இதனால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?
படுக்கையில் அமர்ந்து சாப்பிடக் கூடாது
படுக்கையில் அமர்ந்து உணவு உட்கொண்டால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரும். இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
செரிமான அமைப்பு சேதம்
படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பில் விளைவை ஏற்படுத்தும். இதன்காரணமாக செரிமான சாறுகளின் இயற்கையான ஓட்டத்தில் சிக்கல் வரலாம். அதோடு வயிறு வீக்கம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகள் வரும்.
தொற்றுநோய்களின் ஆபத்து
படுக்கையில் அமர்ந்து உணவு உண்பதால் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பெருகும். இதனால் பல நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும்.
எடை அதிகரித்தல்
படுக்கையில் அமர்ந்து உணவு உண்ணும் போது ஒருவரின் கவனம் முழுவதுமாக போன் அல்லது டிவியில் இருக்கும். இதனால் தேவைக்கு அதிகமாக உணவு உண்ண வேண்டிவரும். இதனால் ஒறு நபரின் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது.
ஏணைய சிக்கல்
படுக்கையில் சாப்பிடுவது தூக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதோடு நம் மூளையின் கவனம் சிதறும். எனவே படுக்கையில் அமர்ந்து உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது.