BP நோயாளிகள் கோடையில் சாப்பிடக் கூடாத பொருட்கள்!

By Karthick M
20 Apr 2024, 22:35 IST

BP நோயாளிகள் சாப்பிடக் கூடாத பொருட்கள்

கோடையில் BP நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கோடையில் உடலின் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே இரத்த அழுத்த நோயாளிகள் என்ன சாப்பிடக்கூடாது என பார்க்கலாம்.

நிபுணர்கள் கருத்து

தொடர்ந்து உயர் இரத்த அழுத்தத்தால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் மது, உப்பு, ஊறுகாய் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை

சர்க்கரை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம் எடை வேகமாக அதிகரிக்கும். எனவே இரத்த அழுத்த நோயாளிகள் அதிக சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உப்பு

உப்பு இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உப்பு சாப்பிடவதை தவிர்க்க வேண்டும்.

இறைச்சி

கோடையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இறத்த அழுத்த நோயாளிகள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

ஊறுகாய், மதுபானம் போன்றவற்றை முற்றிலும் நிறுத்த வேண்டும். BP நோயாளிகள் ஆரோக்கியமாக வாழ இந்த வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.