HIV நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன தெரியுமா?

By Karthick M
27 Sep 2024, 03:54 IST

எச்.ஐ.வி என்பது எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ரெட்ரோ வைரஸ் ஆகும். இந்த நோய் வரும்போது ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

எச்ஐவி நோயின் அறிகுறிகள் பல வருடங்களாக வெளியே தெரியாமல் இருந்து, அதன் பின்னரே வெளிவரும். இருப்பினும் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.

எடை குறைதல்

உடல் எடையில் வேகமான மாற்றங்கள் நிகழும். அதாவது வழக்கத்தை விட வேகமாக உடல் எடை குறையும்.

நகங்களில் கண்டறியலாம்

நகங்கள் பிரிவதும், நகங்களின் வண்ணங்கள் குறைவதும் எச்ஐவி நோய் பாதிப்பிந் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

தொடர் இருமல்

இருமல் அலர்ஜியால் கூட வரலாம். எனினும், தொடர்ந்து வரும் காலங்களில் எச்ஐவி வளர்ந்து வந்தால், இருமலும் அதிகமாகும்.

தோல் மாற்றம்

சருமம் மென்மைத் தன்மையை இழந்து சொரசொரப்பாக மாறலாம். இதனால் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகும்.

அதீத மூட்டு வலி, உடல் சோர்வு, தலைவலி போன்றவையும் எச்ஐவி பாதிப்பாக கண்டறியப்படுகிறது. இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் உறுதி என கூறிவிட முடியாது. பரிசோதனை மேற்கொள்வது நல்லது.