மனஅழுத்தம் மாயமாக இந்த 6 விஷயங்களை தினமும் பாலோப் பண்ணுங்க!

By Kanimozhi Pannerselvam
27 Dec 2023, 08:21 IST

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது

உங்கள் நாளை பாசிட்டீவாக தொடங்க காலையில் எழுந்ததும் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, காற்று வெளியில் நடைபோடுவது உள்ளிட்ட பழக்கங்களை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி அல்லது எந்தவொரு உடல் செயல்பாடும் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைப் போக்கவும் உதவியாக இருக்கும். எனவே உங்கள் பிடித்தமான மற்றும் சுறுசுறுப்பான உடற்பயிற்சிகளை தினந்தோறும் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவு

ஊட்டச்சத்து நிறைந்த சர்விகித உணவில் கவனமாக இருங்கள். ஏனெனில் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க சீரான, சத்தான உணவை உண்ணுங்கள்

நிம்மதியான தூக்கம்

நல்ல தரமான, அமைதியான தூக்கம் சிறந்த மன ஆரோக்கியத்திற்கும் குறைந்த மன அழுத்தத்திற்கும் முக்கியமாகும். மேலும் தினந்தோறும் சரியான நேரத்திற்கு உறக்கச் செல்லும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

நினைவாற்றல்

நாள் முழுவதும் நினைவாற்றலைப் பயிற்சி செய்யுங்கள், உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் ஓய்வளிக்கவும், அவர்கள் செய்யும் காரியங்களை பாராட்டவும் பழகுங்கள். மேலும் தினந்தோறும் நடந்த நல்ல விஷயங்களை டைரியாக எழுதலாம்.

நேரம் ஒதுக்குதல்

நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள் மற்றும் நல்ல மன ஆரோக்கியத்திற்கு சமூகமாக இருப்பது முக்கியம் என்று அவர்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.