அஜீரணத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும் வீட்டு வைத்தியம் இதோ!

By Kanimozhi Pannerselvam
23 Dec 2023, 19:36 IST

பொதினா

அஜீரணத்தை போக்க பொதினாவுடன் கூடிய தேநீர் ஒரு சிறந்த வழியாகும். இது இரைப்பைக் குழாயின் தசைகளை தளர்த்தி செரிமானத்தை எளிதாக்குகிறது.

கெமோமில் தேநீர்

அஜீரணத்தைப் போக்க கெமோமில் தேநீர் மற்றொரு இயற்கை தீர்வாகும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதற்கு உதவுகின்றன.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா ஒரு ஆன்டாக்சிட் ஆகும். இது வயிற்றில் உள்ள அமிலத்தை நடுநிலையாக்கி அஜீரணத்தை நீக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை நீரைக் குடிப்பதும் உங்கள் அஜீரணத்தைப் போக்க உதவும். சர்க்கரை இல்லாமல் குடிப்பது நல்லது.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் அஜீரணத்திற்கு இயற்கையான தீர்வாகும். இது வயிற்றில் உள்ள பி.எச் அளவை சமநிலையில் வைத்திருப்பதன் மூலம் அஜீரணத்தை நீக்குகிறது.

தயிர்

தயிரில் நிறைய புரோபயாடிக்குகள் உள்ளன. எனவே இதனை உட்கொள்வது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.