உங்களுக்கு பசியே எடுக்கவில்லையா? அப்போ இந்த பதிவில் உள்ள வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும். நல்ல முடிவை அடைவீர்கள்.
இஞ்சி
பசியை அதிகரிக்க இஞ்சியை சாப்பிடுங்கள். இஞ்சியை அரைத்து சாறு எடுக்கவும். இப்போது சாறுடன் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து, உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த கலவையை எடுத்துக் கொள்ளுங்கள்.
கொத்தமல்லி
கொத்தமல்லி சாப்பிட பசி அதிகரிக்கும். கொத்தமல்லியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்று நோய்த்தொற்றுகளை குணப்படுத்த உதவுகிறது. இதற்கு கொத்தமல்லி இலை மற்றும் தண்ணீர் கலந்து சாறு தயார் செய்யவும்.
கருமிளகு
கருப்பு மிளகு பசியை அதிகரிக்க உதவுகிறது. இதை உட்கொள்ள, ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெல்லம் தூள் மற்றும் கருப்பு மிளகு கலந்து தண்ணீர் குடிக்கவும்.
ஏலக்காய்
ஏலக்காய் வயிற்றுக்கு நன்மை பயக்கும். ஏலக்காய் சாறு பசியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதற்கு உணவு உண்ணும் முன் 2 ஏலக்காய் சாப்பிடுங்கள்.