முதுகு வலியில் இருந்து உடனடி நிவாரணம்!

By Ishvarya Gurumurthy G
08 Dec 2023, 00:29 IST

முதுகு வலியில் இருந்து உடனடியாக விடுபட வேண்டுமா? இதில் இருந்து உடனடி நிவாரணம் பெற, இந்த பதிவில் உள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

எண்ணெய் கொண்டு மசாஜ்

முதுகு வலி ஏற்பட்டால், எண்ணெய் தடவி மசாஜ் செய்வது பலன் தரும். இதற்கு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 பல் பூண்டு கலந்து சூடுபடுத்தவும். இப்போது இந்த எண்ணெயைக் கொண்டு உங்கள் முதுகு பகுதியில் மசாஜ் செய்யவும்.

உப்பு ஒத்தடம்

முதுகுவலி மற்றும் விறைப்பு ஏற்பட்டால், உப்பு ஒத்தடம் வைக்கவும். இதற்கு வெந்நீரில் 1 டீஸ்பூன் உப்பு கலந்து, இந்த நீரில் டவலை நனைத்து முதுகில் நன்றாக அழுத்தவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம்

முதுகு வலி குணமாக தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டைக் கொண்டு உங்கள் முதுகில் மசாஜ் செய்யவும்.

இஞ்சியை மெல்லுங்கள்

இஞ்சியில் உள்ள ஆன்டிவைரல் பண்புகள் முதுகு வலியைக் குறைக்கின்றன. இதற்கு ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிடலாம். இஞ்சி டீ குடிப்பதும் பலன் தரும்.

பூண்டு

பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முதுகு வலியை குணப்படுத்த உதவுகிறது. இதற்கு சூடான எண்ணெயில் பூண்டை போட்டு தினமும் மசாஜ் செய்யவும்.

இந்த பதிவில் உள்ள குறிப்புகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. நீங்கள் அதீத முதுகு வலியால் அவதிப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.