உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவர்களில் இரத்தத்தை அழுத்தி, இரத்த நாளங்களை சேதப்படுத்தக்கூடிய ஒருவகை நோயாகும். இவை இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இதில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் வழிகளைக் காணலாம்
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள், தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மெதுவாகத் தொடங்கி படிப்படியாக அதிகமாகச் செய்யலாம்
எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது
உடலில் சில குறிப்பிட்ட அளவிலான எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சாதாரண இரத்த அழுத்த அளவை நெருங்கலாம். எனவே எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்
ஆரோக்கியமான உணவை உண்ணுவது
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்ற அதிக சத்தான உணவைச் சேர்க்க வேண்டும்
உப்பைக் குறைப்பது
அன்றாட உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்
புகைபிடிப்பதைத் தவிர்ப்பது
புகைபிடிப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே இதை நிர்வகிக்க புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதய நோய் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்