உடல் எடையை இழக்க அல்லது தசையை வளர்க்க முயற்சிப்பவர்கள் அதிக புரத உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், நீண்ட நேரம் அதிக புரதத்தை சாப்பிடுவது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதில் அதிக புரத உணவின் சாத்தியமான பக்க விளைவுகளைக் காணலாம்
எடை அதிகரிப்பு
அதிக புரதம் சாப்பிடுவது உடல் எடையை இழக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது கூடுதல் கலோரிகளுக்கு வழிவகுக்குகிறது. இவை தசையை வளர்ப்பதற்கு பதிலாக கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யாவிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிப்பு ஏற்படும்
நீரிழப்பு
அதிகளவு புரத உட்கொள்ளல் சிறுநீரகங்கள் கூடுதல் நைட்ரஜனை அகற்ற அதிக தண்ணீரை வெளியிடுகிறது. அதிலும் போதுமான திரவங்களை எடுத்துக் கொள்ளாதபோது நீரிழப்பை ஏற்படுத்தலாம்
மலச்சிக்கல்
அதிக புரத உணவுகளை சாப்பிடுவதால், பெரும்பாலும் குறைவான பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களையே உட்கொள்வர். ஆனால் இதில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். இது செரிமானத்தை மெதுவாக்குவதுடன், மலச்சிக்கலை ஏற்படுத்தவும் உதவுகிறது
கல்லீரல் பிரச்சனைகள்
கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால், அதிகளவு புரதம் உட்கொள்வது கல்லீரலுக்குச் செயலாக்க கடினமாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் இவை கல்லீரல் பாதிப்பை மோசமாக்கலாம்
சிறுநீரக பிரச்சனைகள்
அதிக புரதம் உள்ள உணவுகள் காலப்போக்கில் சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது ஏற்கனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயல்பாட்டை மோசமாக்கலாம்
இரைப்பை குடல் அசௌகரியம்
குறிப்பாக இறைச்சி அல்லது பால் பொருட்களிலிருந்து பெறக்கூடிய அதிக புரதம் காரணமாக வீக்கம், வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது வயிற்று வலியை உண்டாக்கலாம். இந்நிலையில் குடல் இந்த புரதத்தை ஜீரணிக்க கூடுதல் கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது
வாய் துர்நாற்றம்
உடல் ஆற்றலுக்காக புரதத்தை உடைக்கும்போது, அது துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கீட்டோன்களை உருவாக்கலாம். இது குறைந்த கார்ப், அதிக புரத உணவுகளில் பொதுவானதாகும்
புற்றுநோய் ஆபத்து
சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சியைக் கொண்ட உயர் புரத உணவை உட்கொள்வதன் காரணமாக சில புற்றுநோய்களின் ஆபத்து அதிகரிக்கலாம். எனவே, தாவர மற்றும் மெலிந்த விலங்கு மூலங்களிலிருந்து புரதத்தைப் பெறுவது நல்லது