இன்று பலரும் முடியின் முனைகள் உரிந்து, வறண்டு, உடையக்கூடிய பிரச்சனையைச் சந்திக்கின்றனர். முடியின் முனைகள் மந்தமாவதுடன், முடி உதிர்தலை அதிகரிக்கலாம்
காரணங்கள்
முடி முனைகள் பிளவு மற்றும் மந்தமாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு ஆளாவது, ரசாயன முடி தயாரிப்புகளின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் ஹேர் ட்ரையிங் போன்ற முடி பராமரிப்பு நுட்பங்கள் இந்த பிரச்சனைக்கு வழிவகுக்கிறது
வீட்டு வைத்தியங்கள்
முடி பிளவு முனைகளை இயற்கையான முறையில் சில எளிய வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் சரி செய்யலாம்
தேன்
இது தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. இவை பிளவு முனைகளை அகற்ற உதவுகிறது. இதற்கு தேனில் தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து, தலைமுடியில் தடவி, கழுவுவதற்கு முன் 25 நிமிடங்கள் வைத்திருக்கலாம்
தேங்காய் எண்ணெய்
தலைமுடி மற்றும் உச்சந்தலையை தேங்காய் எண்ணெயால் 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 2 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். இவ்வாறு செய்வது உச்சந்தலை மற்றும் வேர்கள் தேங்காய் எண்ணெயின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. பின், லேசான சுத்தப்படுத்தியைப் பயன்படுத்தி கழுவலாம்
கற்றாழை
இது தலைமுடிக்கு ஒரு சிறந்த மூலப்பொருளாகும். இதில் வைட்டமின் ஈ உள்ளது. இந்த கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலையில் தடவுவது அல்லது எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க்கில் கலப்பது தலைமுடியை பளபளப்பாக வைக்கிறது