நீங்க எப்ப சியா விதைகளை சாப்பிடக்கூடாது தெரியுமா?

By Gowthami Subramani
19 Sep 2024, 08:33 IST

சியா விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதையாகும். ஆனால், எப்போதும் இது அனைவருக்குமே சிறந்த தேர்வாக அமையாது. உடல் ஆரோக்கியத்திற்கு சியா விதைகளைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள் என்னென்ன என்பதைக் காண்போம்

செரிமான பிரச்சனை

சியா விதைகளில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே செரிமான பிரச்சனைகள் இருப்பின், இது வீக்கம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இந்நிலையில் சிறிய அளவில் தொடங்கி, உடலின் மாற்றங்களைக் கண்காணிக்க வேண்டும்

ஒவ்வாமை

பொதுவாக விதைகளுக்கு ஒவ்வாமை அதாவது ஆளி அல்லது எள் போன்ற விதைகளுக்கு ஒவ்வாமை இருப்பின், ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தடுக்க சியா விதைத் தவிர்க்க வேண்டும்

சிறுநீரக பிரச்சனை

சியா விதைகளில் அதிக அளவு ஆக்சலேட்டுகள் உள்ளது. எனவே சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் அல்லது சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பின், இதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்

விழுங்குவதில் சிக்கல்

சியா விதைகள் திரவத்தை உறிஞ்சி விரிவடைகிறது. இதனால், விழுங்குவதில் சிக்கல் கொண்டிருப்பின் அல்லது விழுங்குவதைப் பாதிக்கும் நிலை இருந்தால், சியா விதைகளைத் தவிர்க்க வேண்டும்

குறிப்பு

சியா விதைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், இதை சரியான சூழ்நிலை இல்லாத நேரத்தில் சாப்பிடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேறு ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகள் இருப்பின், சுகாதார வழங்குநருடன் கலந்தாலோசிக்கலாம்