ஒன்றா, இரண்டா? பல நன்மைகளை அள்ளித் தரும் அஸ்வகந்தா

By Gowthami Subramani
09 Apr 2025, 16:29 IST

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு பழங்கால ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாக அஸ்வகந்தா அமைகிறது. இதில் அஸ்வகந்தா எடுத்துக் கொள்வதன் மூலம் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு

அஸ்வகந்தா சாப்பிடுவது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது

தசை வளர்ச்சிக்கு

அஸ்வகந்தாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தசைகளுக்கு வலிமை அளிக்க உதவுகிறது. குறிப்பாக, உடற்பயிற்சிக்குப் பிறகு விரைவாக குணமடைய உதவுகிறது

ஆற்றல், சகிப்புத்தன்மையை அதிகரிக்க

அஸ்வகந்தா சகிப்புத்தன்மையை மேம்படுத்தி, உடல் சோர்வை நீக்க உதவுகிறது. இது நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாகவும், முழு ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகிறது

மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்க

அஸ்வகந்தாவின் ஆரோக்கிய பண்புகள் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைக்க உதவுகிறது. இது மன அமைதி மற்றும் தளர்வை ஊக்குவிக்கிறது

மூளை ஆரோக்கியத்திற்கு

இந்த சக்திவாய்ந்த மூலிகை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது கவனம், நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது

நல்ல தூக்கத்திற்கு

அஸ்வகந்தா நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. இது ஆழமான மற்றும் வசதியான தூக்கத்தைத் தருகிறது