சிக்கன் பிரியரா நீங்க.? அப்போ கண்டிப்பா இதை தெரிந்துக்கொள்ளவும்.! சிக்கனில் இருக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்..
எலும்புகள் வலுவடையும்
சிக்கனில் புரதம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இது உங்களின் எலும்பை வலுப்படுத்துகிறது.
ஆரோக்கியமான இதயம்
சிக்கனில் வைட்டமின் பி 6 நிறைந்திருப்பதால், இது மாரடைப்பு போன்ற இதயம் சார்ந்த பிரச்னைகளை தீர்க்கிறது.
புற்றுநோய் அபாயம் குறையும்
சிக்கனில் உள்ள சேர்மங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளின் தேக்கத்தை குறைப்பதால், புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
உடல்சோர்வை நீக்கும்
இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். இவர்கள் சிக்கன் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்
கோழிக்கறியில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால் நினைவாற்றல் மேம்பட உதவுகிறது.