குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதன் தீமைகள்!!

By Devaki Jeganathan
31 Jul 2024, 16:30 IST

ஆரோக்கியமாக இருக்க, உடலில் நீர் சமநிலையை பராமரிப்பது மிகவும் முக்கியம். தண்ணீர் உடலுக்கு மிகவும் முக்கியமானது. தண்ணீர் பற்றாக்குறையால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். குறைவாக தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் பிரச்சனை

தண்ணீர் குறைவாக உட்கொள்வதால், உடலில் உணவு சரியாக ஜீரணமாகாமல், மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

UTI இருக்கலாம்

உடலில் தண்ணீர் இல்லாததால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தண்ணீர் நம் உடலை உள்ளே இருந்து சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் சிறுநீரின் உதவியுடன் உடலின் அழுக்கு யூரியா வடிவில் வெளியேறுகிறது.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரகங்கள் நம் உடலில் இருந்து அசுத்தங்களை அகற்ற வேலை செய்கின்றன. ஆனால், தண்ணீர் பற்றாக்குறை சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். இதனால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

தோல் வறட்சி

தண்ணீர் பற்றாக்குறையால் சருமம் வறண்டு, உயிரற்றதாகிவிடும். உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் மாற்ற விரும்பினால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரக கல்

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆற்றல் குறைவு

உடலின் தேவைக்கேற்ப தண்ணீர் அருந்தாமல் இருந்தால் ஆற்றல் குறையும். தண்ணீர் பற்றாக்குறை பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

எவ்வளவு தண்ணீர் குடிக்கனும்?

ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். லிட்டரில் தண்ணீரின் அளவு தெரியவில்லை என்றால், நாள் முழுவதும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.