இத்தூண்டு செர்ரி பழத்துல இவ்ளோ நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
22 Jun 2025, 21:06 IST

செர்ரி பழங்கள் சுவையானது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் பல சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களால் நிறைந்ததாகும். சூப்பர்ஃபுட்டாக விளங்கும் செர்ரி பழங்களைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காணலாம்

தசை வலி நிவாரணத்திற்கு

புளிப்பு செர்ரிகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை விரைவான மீட்சிக்கு உதவுகின்றன. மேலும், தசை வலியைக் குறைக்கவும், உடற்பயிற்சிக்குப் பிறகு உடலுக்கு வலிமை அளிக்கவும் உதவுகிறது

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த

செர்ரிகளில் வைட்டமின் சி, பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் செல்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க

செர்ரிகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைப்பதிலும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

சிறந்த தூக்கத்திற்கு

செர்ரிகள், குறிப்பாக புளிப்பு செர்ரிகள் ஆனது மெலடோனின் நிறைந்த இயற்கையான மூலமாகும். மெலடோனின் என்பது தூக்க முறைகளை ஒழுங்குபடுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். எனவே, படுக்கைக்கு முன் ஒரு கைப்பிடி செர்ரிகளை சாப்பிடுவதன் மூலம் சிறந்த தூக்கத்தைப் பெறலாம்

மூளை ஆரோக்கியத்திற்கு

செர்ரிகளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது நினைவாற்றல் இழப்பு அபாயத்தையும் குறைக்கிறது. செர்ரிகளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் நினைவாற்றலை மேம்படுத்தவும் மூளையை இளமையாகவும் வைத்திருக்கலாம்

முடிவு

செர்ரிகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால், இதில் இயற்கையான சர்க்கரை உள்ளது. எனவே இவற்றைக் குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. இதனால் செரிமான பிரச்சினைகள் அல்லது சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம். மேலும், உணவில் புதிய உணவுகளைச் சேர்ப்பதற்கு முன் ஒரு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகுவது நல்லது