முகத்திற்கு சோப்பு போடுவதால் இவ்வளவு விளைவுகள் ஏற்படுமா?

By Ishvarya Gurumurthy G
09 Apr 2024, 08:30 IST

முகம் கழுவுவதற்கு சிலர் சோப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதனால் தோலில் பல பாதிப்புகள் ஏற்படும். இதன் பக்க விளைவுகள் குறித்து இங்கே காண்போம்.

இதனால் தான் சோப்பு போடக்கூடாது

உங்களுக்கும் முகத்தில் சோப்பு போடும் பழக்கம் இருந்தால், இன்றே மாற்றிக் கொள்ள வேண்டும். இவற்றில் சோடியம் லாரில் சல்பேட் உள்ளது. இது தவிர, காஸ்டிக் சோடா மற்றும் செயற்கை வாசனையும் சோப்பு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தை பாதிக்கும்.

PH அளவைக் கெடுக்கும்

முகத்தில் சோப்பு போடுவது உங்கள் சருமத்தின் pH சமநிலையை சீர்குலைக்கிறது. பாக்டீரியா தொற்றுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க, pH அளவு சமநிலையில் இருக்க வேண்டும்.

வறட்சி

சோப்பைப் பயன்படுத்துவதால், முகத்தில் தோல் வறட்சி ஏற்படும். குளியல் சோப்பில் ட்ரைக்ளோசன் ரசாயனம் உள்ளது. இது சருமத்தின் இயற்கையான எண்ணெயை நீக்குகிறது.

பிரகாசம் போய்விடும்

சோப்பு பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள பொலிவு நீங்கும். இதைப் பயன்படுத்துவதால், முகத்தின் மென்மையான தோல் சேதமடையத் தொடங்குகிறது.

எரிச்சல் உணர்வு

முகம் கழுவுவதற்கு சோப்பு பயன்படுத்துவதால் முகத்தில் எரிச்சல் ஏற்படும். இது சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை மறையச் செய்கிறது.

துளைகள் தடுக்கப்படுகின்றன

சோப்பு போட்டு முகத்தை கழுவுவதால் சருமத்துளைகள் அடைபட வாய்ப்பு உள்ளது. சோப்பில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் துளைகளில் தடிமனான அடுக்காகக் குவிகின்றன.

முகப்பரு ஏற்படலாம்

முகத்தில் சோப்பு தடவுவதன் மூலம் முகப்பரு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். துளைகள் அடைப்பதால் இது நிகழ்கிறது.