பலாப்பழம் சுவையானது மட்டுமல்லாமல், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, இதன் ஆரோக்கிய நன்மைகளின் காரணமாக கோடைக்காலத்தில் சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்
செரிமானத்தை மேம்படுத்த
பலாப்பழம் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை சீரான செரிமானத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. ஏனெனில், கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மலச்சிக்கல் அபாயம் ஏற்படலாம்
நீரேற்றமாக இருப்பது
பலாப்பழத்தில் உள்ள அதிகளவு தண்ணீர் இருப்பதால், இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்கிறது
எலும்புகளை பலப்படுத்த
பலாப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், கோடையில் சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது
மூளை செயல்பாட்டிற்கு
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி ஆனது குறிப்பாக பி6 வைட்டமின்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், நல்ல மனநிலையை மேம்படுத்துகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
ஆற்றலை அதிகரிக்க
இது பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் நிறைந்த பலாப்பழமாகும். இது உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது மற்றும் கோடையில் சோர்வைப் போக்க உதவக்கூடியதாகும்