கோடை காலத்தில் பப்பாளி சாப்பிடுவது நல்லதா?

By Kanimozhi Pannerselvam
04 Feb 2024, 20:47 IST

வயிற்று உப்புசம்

பப்பாளியில் உள்ள பப்பேன், வீக்கத்தை குறைக்கும் செரிமான நொதி உள்ளது. இது நார்ச்சத்து மற்றும் புரதத்தை உடைக்க உதவுகிறது, இதனால் ஜீரணிக்க எளிதாக உள்ளது.

ஆன்டி ஏஜிங்

பப்பாளியில் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது விரைவிலேயே முகத்தில் வயதான அறிகுறிகள் தோன்றுவதை குறைக்கிறது.

வீக்கத்தை குறைக்கும்

பப்பைன் என்ற என்சைம் காரணமாக பப்பாளி ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது. இந்த நொதி உடலின் சைட்டோகைன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது, வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே இது ஆரஞ்சுப் பழத்தைப் போலவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.

முடிக்கு நல்லது

பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ, உங்கள் உச்சந்தலை வறட்சியை போக்கி, தலைமுடிக்கு ஊட்டமளித்து, வலுவூட்டி, பாதுகாக்கிறது.