இளநீர் குடிக்கும் போது தண்ணீரைக் குடித்து விட்டு, அதன் வழுக்கையைத் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், உண்மையில் இளநீர் வழுக்கை பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததாகும். இதில் இளநீரில் உள்ள தேங்காயை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
இளநீர் வழுக்கை
இளநீரின் வழுக்கையில் மாங்கனீசு, தாமிரம், செலினியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்துமே உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது
எடையிழப்புக்கு
தேங்காய் சதைப்பகுதியை சரியான அளவில் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதற்கு இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்புகளே காரணமாகும். இது வயிறு நிரம்பிய உணர்வை அளித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
தேங்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இளநீர் குடித்த பிறகு வழுக்கை தேங்காயை சாப்பிடலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
தேங்காயில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இளநீர் தேங்காயில் உள்ள கொழுப்புகள் சிறு குடலால் உறிஞ்சப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது
வாய் ஆரோக்கியத்திற்கு
இளநீர் தேங்காயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் வாயில் இருந்து பாக்டீரியா தொற்றுகளைத் தடுத்து, வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது துவாரங்களைத் தடுக்கிறது. மேலும், பற்கள் மற்றும் ஈறுகளைப் பலப்படுத்துகிறது
நீரேற்றமாக வைப்பதற்கு
இளநீர் தேங்காயைக் கோடைக்காலத்தில் சாப்பிடுவது சிறந்த தேர்வாக அமைகிறது. ஏனெனில், இது உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் விளைவைத் தருகிறது. இது உடலுக்கு ஆற்றலை மீட்டெடுப்பதுடன், நீர்ச்சத்தை மீட்டெடுக்கவும், புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை வழங்கவும் உதவுகிறது