தினமும் காலையில் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
17 Sep 2024, 08:30 IST

தினமும் காலையில் மாதுளம்பழம் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் காலையில் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

ஊட்டச்சத்து மிக்க

மாதுளையில் வைட்டமின் சி, ஈ, மற்றும் கே, ரிபோஃப்ளேவின், தயாமின், ஃபோலெட் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது

எடையிழப்புக்கு

மாதுளையில் அதிகளவிலான நார்ச்சத்துக்களும், குறைவான கலோரிகளும் உள்ளது. இது நீண்ட நேரம் முழுமை உணர்வைத் தந்து பசியைக் குறைத்து உடல் பருமனைத் தடுக்கிறது

வீக்கத்தைக் குறைக்க

மாதுளையில் குர்செடின் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

மாதுளை நார்ச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, செல்களின் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் செல்லுலார் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது

மூளை ஆரோக்கியத்திற்கு

மாதுளையில் எலாகிடானின்கள் உள்ளது. இது அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோயிலிருந்து மூளையைப் பாதுகாக்க உதவுகிறது