ஆரஞ்சு பழம் மட்டுமல்லாமல், அதன் தோலும் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் ஆரஞ்சு தோல் தரும் நன்மைகளைக் காணலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
ஆரஞ்சு பழத்தோலில் வைட்டமின் ஏ, பி6, பொட்டாசியம், கால்சியம், தியாமின் போன்ற பல்வேறு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும்
எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க
ஆரஞ்சு பழத்தோலில் அதிக பாலிஃபினால்கள் மற்றும் உயிரியல் தாவர கலவைகள் நிறைந்துள்ளது. இவை கொலஸ்ட்ரால் மற்றும் குறைந்த அளவு எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது
நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு
இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்புச் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும் வெள்ளை இரத்த அணுக்களை உடலில் உருவாக்க உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
ஆரஞ்சு தோல்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இது இரத்தத்தை சீராக பம்ப் செய்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
இயற்கையான இனிமை
ஆரஞ்சு தோலில் அத்தியாவசிய எண்ணெய் மூலமான லிமோனீனின் உள்ளது. இது இயற்கையாகவே இனிமையான பண்புகளைக் கொண்டதாகும். இது உடலின் வீக்கத்தைக் குறைத்து அசௌகரியத்தை எளிதாக்குகிறது
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்
ஆரஞ்சு தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் உடலில் ஏற்படும் செல்களின் சேதத்தைத் தடுக்க உதவுகிறது