வெள்ளரி புதினா நீர் அருந்துவதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
03 Sep 2024, 07:52 IST

வெள்ளரியுடன் புதினா கலந்த நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் வெள்ளரி புதினா நீர் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.

நீரேற்றத்திற்கு

எடை மேலாண்மைக்கு போதுமான நீரேற்றம் அவசியமாகும். வெள்ளரிகளில் குறைந்த கலோரிகள் உள்ளது. இதை புதினா நீருடன் சேர்த்து உட்கொள்வது திரவ உட்கொள்ளலை ஊக்குவித்து புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது

குறைந்த கலோரி

வெள்ளரிகளில் கலோரிகள் மிகவும் குறைவு. வெள்ளரி புதினா கலந்த பானமானது கலோரி இல்லாத பானமாக அமைகிறது. இது எடை இழப்பிற்கு மிகவும் ஏற்ற பானமாகும்

செரிமானத்தை மேம்பட

வெள்ளரி புதினா நீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது. வெள்ளரிகளில் உள்ள என்சைம்கள் உணவை உடைக்க உதவுகிறது. மேலும் புதினா செரிமான அமைப்பைத் தணிக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்

பசியை அடக்க

புதினா பசியை அடக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்டுள்ளது. வெள்ளரி புதினா நீர் குடிப்பது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது, புதினா இலைகளில் மெந்தோல், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

தூக்க சுழற்சியை மேம்படுத்த

இந்த தண்ணீர் பல வழிகளில் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. புதினா இலைகளில் உள்ள மெந்தோல் தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த நீரேற்றமான பானம் நிதானமான தூக்கத்திற்கு முக்கியமானதாகும்