நம்மில் பலருக்கு காஃபி பிடிக்கும். காலையில் எழுந்ததும் காபி, தலை வலித்தால் காபி, பசித்தால் காபி, கோவம் வந்தால் காபி, சோர்வாக இருந்தால் காபி என நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே காபி மாறிவிட்டது. எப்பவும் ஒரே மாதரியான காஃபி குடிக்காமல் இந்த முறை கோல்டு காபி ட்ரை பண்ணுங்க. இதோ உங்களுக்கான ரெசிபி.
தேவையான பொருட்கள்
இன்ஸ்டன்ட் காபி துகள்கள் - 2 தேக்கரண்டி, சர்க்கரை - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 2 மேசைக்கரண்டி, ஐஸ் கட்டிகள், காய்ச்சி ஆறவைத்த பால்.
செய்முறை படி - 1
ஒரு பாத்திரத்தில் இன்ஸ்டன்ட் காபி துகள்கள், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
செய்முறை படி - 2
ஒரு உயரமான டம்ளரில் ஐஸ் கட்டிகள், காய்ச்சி ஆறவைத்த பால், தயார் செய்த காபி கலவை சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான கோல்டு காபி தயார்.
வளர்சிதை மாற்றம்
குளிர் காபியில் உள்ள காஃபின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். உடல் அதிக கலோரிகளை எரிக்க உதவும்.
ஆற்றல் மற்றும் கவனம்
குளிர் காபி விரைவான மற்றும் பயனுள்ள ஆற்றல் ஊக்கத்தை அளிக்கும். கவனம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தும்.
மனநிலை மேம்பாடு
குளிர் காபியில் உள்ள காஃபின் நரம்பு மண்டலத்தைத் தூண்டும். மனநிலையை மேம்படுத்தும் மற்றும் சில நரம்பு சிதைவு நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
ஆக்ஸிஜனேற்றிகள்
குறிப்பாக குளிர்ந்த காபி, சூடான காபியை விட அதிக ஆக்ஸிஜனேற்றிகளைத் தக்கவைத்துக்கொள்ளலாம். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்.