வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டியது மிக முக்கியம். உடல் குளிர்ச்சிக்கு உதவும் பழங்கள் என்னென்ன என்பதை பாரக்கலாம்.
அன்னாசிப்பழம்
வெயில் காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது உடலில் நீர் பற்றாக்குறையை சரிப்படுத்தும். இதில் வைட்டமின்-சி அதிகம்.
தர்பூசணி
உடலின் நீர் அளவை சரி செய்ய தர்பூசணி சாறு அல்லது பழம் சாப்பிடலாம். உங்கள் உடலை நீரேற்றமாக வைப்பதுடன், இயற்கையில் உடலை குளிர்ச்சியாக வைக்கும்.
நுங்கு
நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டும் இன்றி பல்வேறு சரும பிரச்சினைகளையும் சரி செய்யும்.
விளாம்பழம்
விளாம்பழம் கோடைக்காலத்தில் சாப்பிட மிகவும் சிறந்த பழம். இது புத்துணர்ச்சி தரும் பழம்.
ஆரஞ்சு
உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் விரும்பினால் ஆரஞ்சு சாப்பிடலாம். இதில் பொட்டாசியம் அதிகம்.