உங்களுக்கு முட்டை பிடிக்காதா?... அப்போ இத ட்ரை பண்ணுங்க!

By Kanimozhi Pannerselvam
22 Mar 2024, 07:14 IST

முட்டை

முட்டையில் மெக்னீசியம், தாமிரம், புரதம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் புரதங்கள், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கொட்டைகள்

கொட்டைகளில் புரதம் நிறைந்துள்ளது. முட்டையுடன் ஒப்பிடும் போது நட்ஸ் வகைகள் நல்ல புரதச்சத்து நிறைந்த நல்ல மாற்றாகும்.

கொண்டைக்கடலை

முட்டையைப் போலவே புரதம் நிறைந்திருப்பதால் கொண்டைக்கடலை நல்ல மாற்றாகும். முட்டையில் வெறும் 6 கிராம் புரதம் மட்டுமே உள்ளது. ஆனால் 1/2 கப் கொண்டைக்கடலையில் சுமார் 8 கிராம் புரதம் உள்ளது.

தயிர்

தயிர் சாப்பிடுவதன் மூலம் நாம் முட்டை சாப்பிடுவதன் நன்மைகளைப் பெறுகிறோம். இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரதம் போன்றவை உள்ளன.

பனீர்

பனீர் என்பது புரதச்சத்து நிறைந்த பால் பொருட்களாகும். முட்டையை விட இதில் அதிக புரதம் உள்ளது என்று கூறலாம். பனீர் சாப்பிடுவது முட்டை சாப்பிடுவது போன்றது. 100 கிராம் பனீரில் 15 கிராம் புரதம் உள்ளது. அதேசமயம் முட்டையில் 7.5 கிராம் அளவிற்கு மட்டுமே புரதச்சத்து நிறைந்துள்ளது.