ஓமத்தில் இவ்வளவு நன்மைகளா? நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.

By Balakarthik Balasubramaniyan
31 Jul 2023, 14:38 IST

ஓமத்தின் ஊட்டச்சத்துக்கள்

ஓமத்தில் அதிக அளவிலான வைட்டமின்கள் A, B1, B6 மற்றும் E போன்றவை உள்ளன. மேலும் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

செரிமானத்திற்கு உதவும்

ஓமத்தில் உள்ள அதிக அளவு நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு நன்மை அளிக்கின்றன. மேலும், இது மலச்சிக்கல்லை எளிதாக்க உதவுகிறது.

முடி உதிர்வைத் தடுக்க

ஓமச்சாற்றை தினந்தோறும் உச்சந்தலையில் தடவி வர முடி உதிர்தல் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

மாதவிடாயின் போது

காலையில் தேன் அல்லது வெந்நீருடன் ஓமம் கலந்து சாப்பிட்டால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த முடியும்.

நீரிழவு நோயைக் கட்டுப்படுத்த

நீரிழவு நோயைத் தடுப்பதற்கு அரிசியுடன் ஓமம் சேர்த்து உண்ணலாம். இது உடலுக்கு நன்மை தருவதாக அமைகிறது.

எலும்பு வளர்ச்சிக்கு

வைட்டமின் D3 உடன் 1 ஸ்பூன் ஓமம் விதைகளைச் சேர்த்து தினந்தோறும் எடுத்துக் கொள்வது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

மன அழுத்தத்தை குறைக்க

மனக்கவலை மற்றும் மன அழுத்தத்தை நீக்குவதில் ஓமம் முக்கிய பங்காற்றுகிறது. இரவில் தூங்கும் முன், சிறிதளவு ஓமம் பொடி சாப்பிட்டு உறங்குவது நன்மையைத் தரும்.