தலைமுடிக்கு முட்டை
தலைமுடி பராமரிப்பில் முட்டைகள் முக்கிய பங்கு வகிக்கிறது இதில் உள்ள புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முடி பராமரிப்பு வழக்கத்தில் முட்டைகளை இணைப்பது மிகுந்த நன்மை பயக்கும்
முட்டை ஹேர்மாஸ்க்
முடியின் நீளத்தைப் பொறுத்து 1-2 முட்டைகளை அடித்து, இந்த கலவையை ஈரமான முடியில் தடவ வேண்டும். இதை 20-30 நிமிடங்கள் வைத்து பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி கழுவலாம். இந்த ஹேர்மாஸ்க் முடி வளர்ச்சிக்கும், முடியை வலுப்படுத்தவும் உதவுகிறது
தயிர் மற்றும் முட்டை ஹேர்மாஸ்க்
1-2 முட்டைகளை வெற்று தயிருடன் சேர்த்துக் கொள்ளலாம். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி, மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை 20-30 நிமிடங்கள் வைத்து பின் கழுவுவதன் மூலம் உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முடியும்
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்
1-2 முட்டைகளுடன் ஒரு தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். இதை 30 நிமிடங்கள் வைத்து பின் நன்கு கழுவ வேண்டும். இது உலர்ந்த கூந்தலுக்கு ஈரப்பதம் மற்றும் பிரகாசத்தை சேர்க்கிறது
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்
1-2 முட்டைகளுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலை மற்றும் முடி முனைகளில் தடவ வேண்டும். இதை 30 நிமிடங்கள் வைத்து பின் ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். இது சேதமடைந்த முடியை சரி செய்யவும், முடி உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது
தேன் மற்றும் முட்டை ஹேர்மாஸ்க்
தேனுடன் 1-2 முட்டைகளைக் கலந்து முடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது முடிக்கு ஈரப்பதத்தையும், பிரகாசத்தையும் அளிக்கிறது
முட்டை மற்றும் வாழைப்பழ ஹேர்மாஸ்க்
பழுத்த வாழைப்பழத்துடன் 1-2 முட்டைகளைச் சேர்த்து மென்மையாகும் வரை கலக்க வேண்டும். தலைமுடிக்கு இந்த கலவையைத் தடவி 30 நிமிடங்கள் வைத்து பின் கழுவலாம். இது முடிக்கு ஊட்டமளிக்கவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது
கற்றாழை மற்றும் முட்டை ஹேர்மாஸ்க்
1-2 முட்டைகளை புதிய கற்றாழை ஜெல்லை சேர்த்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 20-30 நிமிடங்கள் வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
அவகேடோ மற்றும் முட்டை ஹேர்மாஸ்க்
அவகேடோ பழத்தை மசித்து அதில் 1-2 முட்டைகளைச் சேர்க்க வேண்டும். இதை தலைமுடிக்கு தேய்த்து 30 நிமிடங்கள் வைத்து பின் கழுவ வேண்டும். இது உலர்ந்த மற்றும் உடையக்கூடிய முடிக்கு ஊட்டமளிக்கிறது
தண்ணீரில் கலந்து
ஒரு முட்டையை அடித்து தண்ணீரில் கரைத்து, ஷாம்பு மற்றும் கண்டிஷனிங் செய்த பிறகு இந்த கலவையை இறுதியாக பயன்படுத்த வேண்டும். டஇதை சில நிமிடங்கள் விட்டு குளிர்ந்த நீரில் கழுவுவது முடிக்கு பிரகாசத்தையும், மென்மையையும் தருகிறது