நேரான, சைனிங் முடிக்கு இதை அப்ளை பண்ணுங்க

By Gowthami Subramani
24 Jun 2024, 09:00 IST

வறண்ட மற்றும் கரடுமுரடான முடியை நிர்வகிப்பது இன்று பலருக்கும் சவாலான ஒன்று. ஆனால், இதற்கு சிறந்த தீர்வாக வீட்டிலேயே சில பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் மென்மையான, பளபளப்பான மற்றும்நேரான முடியைப் பெறலாம்

தயிர் மற்றும் தேன்

தேனுடன் தயிரைக் கலந்து, அந்த கலவையை தலைமுடியில் தடவி, வேர்கள் முதல் நுனி வரை மசாஜ் செய்ய வேண்டும். இதை 20-30 நிமிடங்களுக்கு வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் முடியை நீரேற்றமாக வைப்பதுடன் மென்மையாக வைக்கிறது

அரிசி தண்ணீர்

அரிசியை சில மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு இதை தலைமுடியில் ஊற்ற வேண்டும். இதை 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு வைப்பதன் மூலம் அரிசி நீரில் உள்ள இனோசிட்டால் முடி சேதத்தை சரி செய்து, வறட்சியைக் குறைக்கிறது

முட்டை & ஆலிவ் ஆயில்

இரண்டு முட்டைகள் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். இந்த கலவையை, தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவ வேண்டும். இதில் முட்டையின் புரதச்சத்துக்கள் முடியை வலுப்படுத்தவும் மென்மையாக்கவும் உதவுகிறது

வாழைப்பழம் & தேன்

பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதில் தேன் சேர்த்து, அந்தக் கலவையை முடியில் தடவி 30 நிமிடங்கள் வைத்து பின் கழுவி விடலாம். இந்த ஹேர் மாஸ்க் முடியை நீரேற்றமாக வைப்பதுடன், முடி உதிர்வைக் குறைத்து இயற்கையான பிரகாசத்தைத் தருகிறது

கற்றாழை ஜெல்

இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தலைமுடியை மென்மையாக வைத்திருக்கவும் உதவும் என்சைம்களைக் கொண்டுள்ளது. புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து தலைமுடிக்கு தடவி 30 நிமிடங்கள் விட்டு, பின்னர் கழுவ வேண்டும். இது முடியை ஆழமாக நிலைநிறுத்தி மென்மையாக வைக்க உதவுகிறது