நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதில் சர்க்கரை நோயாளிகள் டிராகன் பழம் சாப்பிடலாமா என்பது குறித்துக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
இதில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்றவை பல்வேறு ஆரோக்கிய நலன்களைத் தருகிறது
குறைந்த கிளைசெமிக் குறியீடு
டிராகன் பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது . எனவே சர்க்கரை நோயாளிகள் டிராகன் பழத்தை சரியான அளவில் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்
நார்ச்சத்துக்கள் நிறைந்த
டிராகன் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், எடை பராமரிப்பு, இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் இந்த பழம் உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன
மக்னீசியத்தின் நல்ல ஆதாரம்
டிராகன் பழத்தில் நிறைந்துள்ள மக்னீசியம் சத்துக்கள் உடல் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது
நீரிழிவு நோயாளிகள் டிராகன் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருப்பினும், மருத்துவரின் ஆலோசனையின் படி தகுதியான அளவு டிராகன் பழம் எடுத்துக் கொள்வது நல்லது