குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால்... பெற்றோர்களே உஷார்!
By Kanimozhi Pannerselvam
06 Jan 2024, 10:46 IST
எரிச்சல் அடைவது
உங்கள் குழந்தை சண்டையிடுகிறதா அல்லது அல்லா விஷயத்திற்கும் எரிச்சலடைகிறதா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இது குழந்தையின் மனச்சோர்வின் நிலையாக இருக்கலாம். பெற்றோர் உடனடியாக குழந்தைக்கு அறிவுரை வழங்க வேண்டும். தேவைப்பட்டால், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம்.
ஓவர் அமைதி
குழந்தை மிகவும் அமைதியாக இருப்பது அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதை குறிக்கும் மிக முக்கியமான அறிகுறியாகும். யாரிடமும் பேச பிடிக்காதது, யாராவது பேச ஆரம்பித்தால் அந்த இடத்தை விட்டு ஓடுவது போன்ற விஷயங்களை குழந்தைகள் செய்தால், உடனடியாக பெற்றோர் அவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும்.
குழந்தைகள் திடீரென்று தனிமையை விரும்புவது, யாரிடமும் பேச பிடிக்காமல் தனியே பேச ஆரம்பித்தால் உடனடியாக பெற்றோர்கள் உஷாராக வேண்டும். கட்டாயம் அவர்களை மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற அழைத்துச் செல்லவது சிறந்தது.
உணவை வெறுப்பது
குழந்தைகளிடம் திடீரென உணவு சம்பந்தமான பிரச்சனைகள் தென்பட ஆரம்பிக்கும். பசியின்மை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம், பெரும்பாலும் எடையில் கடுமையான மாற்றங்கள் மூலம் இதை கண்டறிய முடியும்.