குழந்தைகளுக்கு பாதாம்
பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நலன்களைத் தரும். குழந்தைகளுக்கு ஊறவைத்த பாதாம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
ஊறவைத்த பாதாமில் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் ஈ, புரோட்டீ, மக்னீசியம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது
எலும்பு ஆரோக்கியம்
ஊறவைத்த பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது. மேலும் இது தசை அசௌகரியத்தை தடுக்கவும் உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்திக்கு
ஊறவைத்த பாதாமில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகளவு உள்ளது. இது குழந்தைகளில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, சளி, இருமல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது
இதய ஆரோக்கியம்
பாதாமில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகின்றன
மூளை செயல்பாடுக்கு
குழந்தைகளுக்கு ஊறவைத்த பாதாமை கொடுப்பது அவர்களின் மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது. இது குழந்தைகளின் அறிவாற்றல் திறனை மேம்படுத்த உதவும்
செரிமானத்தை சீராக்க
ஊறவைத்த பாதாம் செரிமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கக் கூடியதாக அமைகிறது
ஆற்றலைத் தர
பாதாமில் உள்ள புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்துக்கள் போன்றவை குழந்தைகளுக்கு உடனடி ஆற்றலைத் தரக்கூடியதாகும்
குறிப்பு
ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயனைத் தரும். அதே சமயம், தினசரி உணவு முறையில் மாற்றத்தைக் கொண்டு வரும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது